Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பணமோசடி புகாருக்கு பரிதாபங்கள் ’கோசு’ விளக்கம்!

பணமோசடி புகாருக்கு பரிதாபங்கள் ’கோசு’ விளக்கம்!
, சனி, 21 ஆகஸ்ட் 2021 (10:38 IST)
யுடியூப் மூலமாக பிரபலமாகி இன்று சினிமாவில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளனர் கோபியும் சுதாகரும்.

கிரவுட் பண்டிங் என்று சொல்லப்படும் மக்களிடம் இருந்து பணம் வசூல் செய்து திரைப்படங்களை உருவாக்கும் நடைமுறை வெளிநாடுகளில் மிகவும் பிரபலம். மிகப்பெரிய ஸ்டுடீயோக்கள் மற்று  தயாரிப்பு நிறுவனங்களை அனுக முடியாத நல்ல கதை வைத்துள்ள இயக்குனர்கள் தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் மூலமாகவோ அல்லது இணையதளங்களின் மூலமாகவோ பணம் திரட்டி படத்தை எடுத்து வருகின்றனர். இதில் பணம் முதலீடு செய்யும் ஒவ்வொருவருமே தயாரிப்பாளர்கள்தான்.

அதுபோல இந்தியாவில் முதன் முதலாக கன்னடத்தில் லூசியா எனும் திரைப்படம் மக்கள் பணத்தில் வெளியாகி வெற்றிக் கண்டது. அதையடுத்து இந்த முயற்சிக்கு இப்போது ஆதரவு பெருகி வருகிறது. சமீபத்தில் வெளியான நெடுநல்வாடை எனும் திரைப்படம் கூட இயக்குனரின் 50 நண்பர்கள் உதவியால் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதுபோல இப்போது சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் கோபி மற்றும் சுதாகர் ஒருப்படத்தை தொடங்க உள்ளனர். இதற்காக தங்கள் யூட்யூப் சேனலின் பாலோயர்ஸிடம் இருந்து நிதி கேட்டுள்ளனர். இதன் மூலம் சுமார் 6 கோடி வரை நிதி திரட்டியுள்ளனர். அந்த படத்துக்கான வேலைகள் இப்போது தொடங்கியுள்ள நிலையில் கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் அந்த படம் இன்னும் முடியவில்லை. அதற்குள் அவர்கள் இருவரும் பணமோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன.

இதுபற்றி இருவரும் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளனர். அதில் ‘படம் மிகவும் சிறப்பாக உருவாகி வருகிறது. ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக அனுகி வருகிறோம். படம் ரிலீஸான பின்னர் தாமதத்துக்கான காரணம் உங்களுக்குப் புரியும்’ எனக் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மா வேடங்களில் நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை! ஐஸ்வர்யா ராஜேஷ் பளீச்!