Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் ‘கருப்பர் நகரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் ‘கருப்பர் நகரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
, புதன், 8 நவம்பர் 2023 (07:46 IST)
நடிகை நயன்தாரா நடிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் வெளியான படம் அறம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வர்த்தக ரீதியாகவும் நல்ல வசூலை பார்த்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை, கலெக்டரான நயன்தாரா காப்பாற்றப் போராடுவதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் தொடர்ச்சியாக அறம் 2 இயக்கப்படும் என்ற செய்திகள் வெளியானது. இதில் நயன்தாராவே நடிப்பதாவும் கூறப்பட்டது. 

இதையடுத்து ஜெய்யை வைத்து ஒரு படத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினார். ஆனால் அந்த படம் என்ன ஆனது என்பதே யாருக்கும் தெரியவில்லை. இப்போது ஆண்ட்ரியாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்போது ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜேடி சக்ரவர்த்தி நடிப்பில் அவர் இயக்கிய கருப்பர் நகரம் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி கவனம் ஈர்த்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு சுதா கொங்கரா படம் நடக்குமா? லேட்டஸ்ட் அப்டேட்!