நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அவரின் சம்பளம் பல மடங்கு உயர்ந்து இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தியன் 2 ஷூட்டிங்கை முடித்துள்ள கமல் அடுத்து பிராஜக்ட் கே படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் ஹெச் வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இதற்கிடையில் ஹெச் வினோத் இயக்கும் படத்துக்காக சில பயிற்சிகளை கமல்ஹாசன் மேற்கொண்டு வருகிறார் என சொல்லப்பட்டது. அந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கும் என சொல்லப்பட்டது.
ஆனால் இந்தியன் 2 ஷூட்டிங்கை மீண்டும் படக்குழு தொடங்க உள்ளதால், இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் தள்ளிபோக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்துக்கு மர்மயோகி என்ற தலைப்பு வைக்க இயக்குனர் ஹெச் வினோத் ஆசைப்பட்டு, கமல்ஹாசனிடம் பேசிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே தலைப்பில் கமல்ஹாசன் ஒரு படத்தை தொடங்க திட்டமிட்டு பின்னர் அதைக் கிடப்பில் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.