ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு நடித்த எல் ஜி எம் படததை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது.
வசூல் ரீதியாகவும் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் அடுத்த படத்தைத் தயாரிக்க தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றிய ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோருக்கு இன்னமும் முழு சம்பளமும் கொடுக்காமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.