பாகுபலிக்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் பிரபாஸ் தவித்து வரும் நிலையில் சமீபத்தில் ரிலீஸான அவரின் ஆதிபுருஷ் திரைப்படம் மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்தது. ஆனால் அடுத்து பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான். இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.
இந்த படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்த நிலையில் இப்போது ஜனவரி மாதத்துக்குத் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அந்த தேதியில் இப்போது வேறு சில படங்கள் ரிலீஸுக்கு திட்டமிட்டு வருகின்றன.
ஹரிஷ் கல்யாண், இந்துஜா நடிபில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் பார்க்கிங் திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த தேதியில் ஜெயம் ரவியின் இறைவன் திரைப்படமும் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.