விஷாலின் அடுத்த படத்தை லக்ஷ்மண் இயக்க இருக்கிறார் எனத் தகவல்வெளியாகியுள்ளது.
விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன்இயக்கிய இந்தப் படம், சமீபத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து லிங்குசாமிஇயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘சண்டக்கோழி 2’ படம் ரிலீஸாக இருக்கிறது.
இதன்பிறகு விஷால் நடிக்கும் படத்தை, ஏ.ஆர்.முருகதாஸின்உதவியாளரான வெங்கட் மோகன் இயக்குகிறார். ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது.
இந்தப் படத்தில் நடிக்கும்போதே, இன்னொரு படத்திலும் நடிக்கஇருக்கிறார் விஷால். லக்ஷ்மண் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். ஜெயம் ரவி, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான ‘போகன்’ படத்தை இயக்கியவர் இவர்.