கேரளா நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து விசாரணை செய்த ஹேமா கமிஷனிடம் 20 பேர் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், அந்த சாட்சிகளிடம் தற்போது சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் குற்றம் சாட்டப்பட்ட பிரபல நடிகர்கள் மீது கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கேரளா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் அதிகரித்து வந்த நிலையில், இது குறித்து ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டது. நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த புகார்கள்மலையாள திரையுலகை அதிரவைத்தது.
3,800 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிட்டி விசாரணை அறிக்கைகளில் இதுவரை 296 பக்கங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. முழு அறிக்கையும் சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கையில் வாக்குமூலம் அளித்த 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மலையாள திரையுலக பிரபலங்கள் சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.