ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராடி மகத்தான வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாட வேண்டிய நேரத்தில் காவல்துறையின் தடியடியால் வேதனையில் துடித்துக்கொண்டிருந்தனர். உடல் வேதனை மட்டுமல்ல மன வேதனையாலும் தான்.
இத்தனை நாள் போராட்டத்தை அறவழியில் நடத்தினோம் ஆனால் அதனை அறவழியில் முடிக்க காவல்துறை உதவவில்லையே என்றுதான். அனைத்தையும் தாண்டி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்களின் அறப்போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
மாணவர்களின் போராட்டம். ஏழு நாட்கள் நடைபெற்ற அறப்போராட்டத்தை அரசும், காவல்துறையும் வன்முறையுடன் முடித்தால் கூட மாணவர்களின் முயற்சியால் தான் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெறுகிறது எனலாம்.
ஜல்லிக்கட்டு குறித்த ஆல்பம் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். நன்றாக போய்க்கொண்டிருந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டார்கள் என்று ஆதி பின்வாங்கினார். இவை மாணவர்கள் மீது குற்றம் சுமத்த அச்சாரமாக அமைந்தது. அவர் பேசிய மறுநாள் காலை மெரினாவில் வன்முறை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சென்னையில் பல இடங்களில் வன்முறை களமாக மாறியது.
இந்நிலையில் போராட்டக்களத்தில் உடன் இருந்த இயக்குநர் ராம் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீடியோ பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஆதி பேசிய வீடியோவை எத்தை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அவர் அப்படி பேசுவதை பார்க்கும் போது அவருக்கும், சுப்ரமணிய சாமிக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை என்றே தெரிகிறது என்று ராம் காட்டமாக தன் கருத்தை தெரிவித்துள்ளார்.