கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதும் AI தொழில்நுட்பம் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பம் நுழைந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஹாலிவுட் திரைக்கதை எழுத்தாளர்கள் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் AI மூலம் திரைக்கதை எழுதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே மாதம் முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்து செயல்படுத்தி வருகின்றனர். இந்த வேலை நிறுத்தத்துக்கு ஹாலிவுட் நடிகர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எழுத்தாளர்கள் சங்கத்தை சமீபத்தில் சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்க பிரதிநிதிகள் அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி அளித்துள்ளதாகவும், இதனால் இந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தன. ஆனால் அதன் பிறகு ஹாலிவுட் நடிகர் சங்கத்துக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவுகள் எட்டப்படவில்லை. மேலும் தொடர்ந்து நடிகர் சங்கத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடபோவதில்லை என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதனால் இப்போதைக்கு ஹாலிவுட் நடிகர்கள் சங்க போராட்டம் முடிவுக்கு வராது என தெரிகிறது.