இசைஞானி இளையாராஜா அடுத்தடுத்து இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தொடர் இசைக் கச்சேரிகளை நடத்துகிறது. அதன் ஒரு கட்டமாக சென்னையில் இசைஞானி இளையராஜா இசை கச்சேரி நேற்று வெகுசிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த நிகழ்ச்சியில் பல முன்னணிப் பாடகர்கள் கலந்துகொண்டு இதுவரை இசைநிகழ்ச்சியில் இடம்பெறாத இளையராஜாவின் பாடல்களை எல்லாம் பாடி, ரசிகர்களை மகிழ்வித்தனர். அப்போது தன்னுடைய முதல் படத்தில் இடம்பெற்ற மச்சானப் பாத்தீங்களா பாடல் உருவான விதம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார் இளையராஜா. அந்த பாடல் இசையை வாசிக்க சொல்லி பின்னர் அது எவ்வாறு உருவானது என விளக்கினார்.
அப்போது பேசிய அவர் “நான் க்ளாஸ் எடுக்குறேன்னு நெனைக்காதீங்க. இப்போ என்னுடைய பயோபிக் எடுக்குறாங்க. அதுல இந்த பாடல் எல்லாம் எப்படி உருவாகுச்சுன்னு தனுஷ்கிட்ட சொல்லி இருக்கேன். ஆனா அது படத்துல வருமான்னு தெரியல. அதான் உங்க எல்லார்கிட்டயும் அதைப் பகிர்ந்துகிட்டேன். இதையெல்லாம் நானே என் மனசுல வச்சுகிட்டு என்னப் பண்ணபோறேன்.. அதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சாதானே சந்தோஷம். நீங்க சந்தோசப்படுறதுதானே எனக்கு சந்தோஷம்” எனக் கூறியுள்ளார்.