விஜய் நடித்த நண்பன் உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை இலியானா. இவர் கடந்த சில வருடங்களாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சகோதரருடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் அதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இதனிடையே இவர் திடீரென திருமணம் செய்யாமலே கர்ப்பம் ஆகிவிட்டார். அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா அந்த நபர் யார் என்பதை இன்னும் வெளிப்படையாக கூறவில்லை. இந்நிலையில் அவர் மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபர் என்றும் அவரை ரகசிய திருமணம் செய்து விரைவில் அவரை அறிமுகப்படுத்தப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.