இந்தியா-இங்கிலாந்து 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழாவை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் துவக்கிவைக்கிறார். இந்த நிகழச்சியில் இந்தியா சார்பில் ஜெட்லி, கமல், கபில்தேவ் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழாவை இன்று மாலை இங்கிலாந்து ராணி இராண்டாம் எலிசபெத் துவக்கி வைக்கிறார். லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த கலாச்சார விழாவை ராணி துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உலகநாயகன் கமல்ஹாசன், சுரேஷ் கோபி, கிரிக்கெட் பிரபலம் கபில் தேவ், பாடகரும் நடிகருமான குர்தாஸ் மன், ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் ஆரோரா, மணீஷ் மல்கோத்ரா மற்றும் அனோஷ்கா ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், பிரதமர் மோடி தனது பெயரை முன்மொழிந்ததை மிகப் பெரும் கவுரவமாகக் கருதுகிறேன் என்றார்.
மோடியின் ப்ண மதிப்பு இழப்பை வரவேற்ற கமல், பாஜக யின் பின்புலத்தினால்தான் சசிகலாவை எதிர்த்தும், பன்னீர் செலவத்தை ஆதரித்தும் ட்வீட்டுகளாக போட்டுத் தள்ளுகிறார் என்ற விமர்சனம் இருந்து வந்தது. மோடிக்கான கமலின் நன்றி நவிலல் இந்த விமர்சனத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.