Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஷங்கர் வெளியிட்ட வீடியோ!

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஷங்கர் வெளியிட்ட வீடியோ!
, திங்கள், 3 ஏப்ரல் 2023 (08:41 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இப்போது இந்தியன் 2 ஷூட்டிங் சென்னையில் நடந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட ஒருமாதம் இங்கு ஷூட்டிங் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஷூட்டிங் நிறைவடையும் போது கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் முழுவதும் இந்தியாவில் இந்த பட ஷூட்டிங் நடந்த நிலையில் இப்போது அடுத்த கட்ட ஷூட்டிங்குக்காக படக்குழு தைவான் நாட்டில் முகாமிட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஷூட்டிங் நடக்கும் நிலையில் இந்தியன்  2 எனப் பெயர் பொறிக்கப்பட்ட பலூனை படக்குழு பறக்கவிட்டுள்ளது. இது சம்மந்தமான வீடியோவை இயக்குனர் ஷங்கர் பகிர்ந்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹலோ நண்பா..! இன்ஸ்டாகிராமில் நுழைந்த விஜய்! – சில நிமிடங்களில் லட்சக்கணக்கான ஃபாலோவர்கள்!