அமெரிக்காவில் NPC என்ற பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் America's Got Talent என்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறையில் திறமை வாய்ந்த நபர்கள் பங்குபெற்று தங்களது வியக்க வைக்கும் திறமையை உலகிற்கு வெளிப்படுத்துவார்கள்.
அப்படித்தான் இந்த வருடத்திற்கான சீசனில் உலகம் முழுக்க இருந்த பலவேறு பல்வேறு திறமைசாலிகளில் 40 குழுக்கள் மட்டுமே நிகழ்ச்சியின் முதல் கட்டத்திற்கு தேர்வாகியது. அதில் பங்கேற்ற இந்திய குழு ஒன்று பல கோடி ரசிகர்களை வியக்க வைத்தது. V.UNBEATABLE என்ற மும்பை தாராவி பகுதியை சேர்ந்த 29 பேர் கொண்ட இந்த குழு அந்த மேடையில் இதுவரை யாரும் நிகழ்த்தாத பல நடன சாகசங்களை அரங்கேற்றினர்.
அதிலும் குறிப்பாக இந்நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் ரஜினியின் பேட்ட படத்தின் பாடலான மரண மாஸ் பாடலுக்கு இந்த குழு சூறாவளி நடனமாடினர். இதன் மூலம் முதன்முறையாக அமெரிக்காவின் மேடையில் தமிழ் ஒலித்தது. பின்னர் இந்நிகழ்ச்சியில் சிறந்த திறமையான முதல் பரிசினை வென்றதுடன் 7 கோடியே 15 ரூபாயை கைப்பற்றியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.