Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்!

‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்!

J.Durai

, வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (10:00 IST)
பிரைம் வீடியோ, மனதை ஒன்றிப் போகச் செய்யும் இந்தத் தொடர்  நிகழ்ச்சியின் விளம்பர போஸ்டர்களை சென்னை முழுவதும் நிறுவியது. 
 
ஒரு வலைப் பின்னலில் இருந்து 'வனராட்சி' AKA 'ராட்சி' என்ற ஒரு கொடிய  புராணகால வன மோகினி மற்றும் பழங்குடியினருக்கான வன தெய்வம், வெளிவரும் இதயத்தைத் பிழியும் காட்சிகளை இந்த விளம்பரக் காட்சிகள் எடுத்துக் எடுத்துக்காட்டுகின்றன. விளம்பரப் பலகைகளின் ஓரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் சிலந்தி வலை  தமிழ்நாட்டின் தென்காடு என்ற சிறிய கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக செயல்படுகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்ட இந்த விளம்பர போர்டுகள் பார்வையாளர்கள் மத்தியில்  இந்த திகில்-கிரைம்-டிராமா தொடரை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன. 
 
சமீபத்தில் இந்தத் தொடரின் குழுவினர், இந்த ஹோர்டிங்குகளை வெளியிடுவதோடு, நிகழ்ச்சியின் வெற்றியை பார்வையாளர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நோக்கத்தில் சென்னை மெரினா கடற்கரைக்கும் சென்றிருந்தார்கள்.
 
நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடமிருந்து கிடைத்த நேர்மறையான விமர்சனங்கள் குறித்து பேசிய தொடரின் கதாநாயகனான நடிகர் நவீன் சந்திரா, கூறினார் 
 
 "இன்ஸ்பெக்டர் ரிஷி தொடருக்கு பார்வையாளர்கள் அளித்த அற்புதமான விமர்சனங்களுக்காக அவர்களுக்கு நன்றி சொல்ல இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்..
 
அனைவரின் பாராட்டும் ஆதரவும் எங்களை திக்குமுக்காடச் செய்துவிட்டதோடு இந்த நிகழ்ச்சி தொடர்பாக எங்கள் மீது அனைவராலும் காட்டப்படும்   அன்பும் ஆதரவும் என்னை மிகவும் பணிவாக உணரச்செய்து மகிழ்ச்சியளித்தது. உலகம் முழுவதிலுமிருந்தும் பார்வையாளர் களிடமிருந்து வரும் இத்தகைய பாராட்டுகள் மேலும் சிறப்பாக செயல் படுவதற்கான மன எழுச்சியை என்னுள் தூண்டி, மனதைக் கொள்ளை கொள்ளும்  மற்றும் மகிழ்விக்கும் கதைகளைக் வழங்கும் ஆர்வத்தையும்  எனக்கு அளிக்கிறது. இன்ஸ்பெக்டர் ரிஷி எங்கள் அனைவரது கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தின் பலனாக விளைந்தது. மக்கள் இந்த நிகழ்ச்சியை பெருமளவு விரும்பு வதைக் கண்டு நாங்கள் நன்றியோடு மன நிறைவாக உணர்கிறோம்."
 
இந்தத் தொடர் இயற்கைக்கு மாறான அல்லது வழக்கத்தை மீறிய சம்பவங்கள் நிறைந்த ஒரு புதிரான மற்றும் மூளையை கசக்கிப் பிழியும் ஒரு வழக்கின் விசாரணையை எதையும் சந்தேகத்தோடு ஒற்றைக் கண் பார்வையில் காணும் குற்றப் பிரிவு ஆய்வாளர் ரிஷி நந்தன்  தனது நம்பிக்கைக்குரிய இரண்டு துணை ஆய்வாளர்கள் அய்யனார் மற்றும் சித்ரா ஆகியோரின் உதவியோடு,மேற்கொள்வது குறித்து பேசுகிறது. தனிப்பட்ட முறையில் தான் எதிர்கொள்ளும் தடைகளைத் தாண்டி மர்மமான கொலைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவருகிறது. 
 
நந்தினி ஜே.எஸ் உருவாக்கி எழுதிய இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரை, சுக்தேவ் லஹிரி தயாரித்துள்ளார். இதில் பன்முக திறமை கொண்ட நடிகர் நவீன் சந்திரா முன்னணி வேடத்தில் நடிக்க அவரோடு இணைந்து, சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
 
பத்து எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தற்போது  பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி& லோகேஷ் இணையும் ‘தலைவர் 171’ படம் இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?