ஜி வி பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் திரைப்படம் பல கட்ட பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட திரைப்படம் வெயில். அதில் நாயகனாக ஜி வி பிரகாஷ் நடித்திருந்தார். சென்னை புறநகர் பகுதிகளான கண்ணம்மா நகர் மற்றும் செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் நடப்பது போல கதை உருவாக்கப்பட்டு இருந்தது. படம் கடந்த ஆண்டே முழுவதும் முடிந்திருந்தாலும் ரிலீஸ் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் வசந்தபாலன் மற்றும் ஜி வி பிரகாஷ் ஆகியோர் தங்கள் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் படத்தை வாங்கிய சில விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் ரிலீஸில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட டிசம்பர் 9 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் செண்பகமூர்த்தியின் மற்றொரு விநியோக நிறுவனம் இப்போது இந்த படத்தைக் கைப்பற்றி அறிவித்த தேதியில் ரிலீஸ் செய்ய உள்ளதாம். இதனால் இதற்கு முன்னர் பிரச்சனை செய்த விநியோகஸ்தர்கள் எந்த பிரச்சனையும் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.