Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஜப்பான் படத்தால் தயாரிப்பாளருக்கு 30 கோடி ரூபாய் நஷ்டமா?

ஜப்பான் படத்தால் தயாரிப்பாளருக்கு 30 கோடி ரூபாய் நஷ்டமா?
, வியாழன், 16 நவம்பர் 2023 (07:59 IST)
கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகி உள்ள நிலையில் இந்த படம்  எதிர்பார்த்த அளவு இல்லை என்று தான் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கே எஸ் ரவிக்குமார் என்ற அரசியல்வாதிக்கு சொந்தமான நகைக்கடையில் 200 கோடி மதிப்புள்ள நகையை ஜப்பான் என்ற கார்த்தி திருடுகிறார் இதனால் அதிர்ச்சி அடையும் கே எஸ் ரவிக்குமார் காவல்துறையை அனுப்பி ஜப்பானை பிடிக்க உத்தரவிடுகிறார். ஜப்பான் காவல்துறையிடம் பிடிபட்டாரா என்பது தான் இந்த படத்தின் கதை.

மோசமான திரைக்கதை காரணமாக இந்த படம் ரசிகர்களை திருப்தி செய்யவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யப்படவில்லை என சொல்லப்ப்டுகிறது.

இந்த படத்தின் திரையரங்க வசூலில் தயாரிப்பாளரின் பங்கு வெறும் 5 கோடி ரூபாய் அளவுக்கு தான் வந்துள்ளதாம். ஆனால் ஜப்பான் படம் 20 கோடி ரூபாய் அளவுக்கு எதிர்பார்த்தார்களாம். மேலும் படத்தின் தொலைக்காட்சி உரிமம் இன்னும் விற்கப்படவில்லையாம். இதன் மூலம் சுமார் 30 கோடி ரூபாய் அளவுக்கு இந்த படத்தின் மூலம் நஷ்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

60 கோடி ரூபாய் கடன் இருக்கு… சொன்னபடி ரிலீஸ் ஆகுமா துருவ நட்சத்திரம்?