மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான ஒரு ஆளுமையாக இருந்தவர் ஜெயகாந்தன். தன்னுடைய சிறுகதைகளுக்காகவும், நாவல்களுக்காகவும் மிகப்பெரிய வாசகர் பரப்பைக் கொண்டிருந்த ஜெயகாந்தன், ஒரு கட்டத்தில் எழுதுவதை நிறுத்திக் கொண்டார்.
ஜெயகாந்தனைப் பற்றி இன்றைக்குள்ள இளைய தலைமுறைக்கு தெரியாத விஷயம், அவர் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பதுதான், தன்னுடைய கதைகளையே யாருக்காக அழுதான் மற்றும் உன்னை போல் ஒருவன் என திரைப்படங்களாக எடுத்துள்ளார்.
இந்த இரண்டு படங்களும் இதுவரை இணையத்தில் கிடைக்காமல் இருந்தன. இந்நிலையில் இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் மகள் தீபலஷ்மி தன்னுடைய யுடியூப் பக்கத்தில் ஜெயகாந்தன் இயக்கிய உன்னை போல் ஒருவன் திரைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் தீவிர சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது.