பஹத் பாசில் நடிப்பில் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள ஜோஜி திரைப்படம் பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இயக்குனர் திலேஷ் போத்தன் அறிமுகமான முதல் படமான மகேஷிண்ட பிரதிகாரம், மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமா ரசிகர்களுக்கே மிகவும் பிடித்த படமாக அமைந்து திரைக்கதைக்கான தேசிய விருதை பெற்றது. அதையடுத்து மீண்டும் இருவரும் இணைந்த தொண்டிமுதலும் திருச்ஷாட்சியும் திரைப்படமும் மிகுந்த பாராட்டுகளை பெற்றது.
இதையடுத்து இப்போது இருவரும் மீண்டும் இணைந்து ஜோஜி என்ற படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படம் ஷேக்ஸ்பியரின் நாடகமான மெக்பத்தின் ஒரு பகுதியை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் இன்று அமேசான் ப்ரைமில் படம் வெளியானது.
இவர்கள் கூட்டணியில் உருவான முதல் இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்த நிலையில் இந்த படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போலவே இணையத்தில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது ஜோஜி திரைப்படம்.