Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனியோடு கைகோர்த்த லைகா!

‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனியோடு கைகோர்த்த லைகா!
, புதன், 5 ஜூலை 2023 (13:47 IST)
மலையாள சினிமா தனக்கென சிறிய மார்க்கெட்டை கொண்டிருந்தாலும், இந்திய சினிமா துறையில் ஆரோக்யமான ஒரு துறையாக திகழ்கிறது. அங்கு கதையம்சம் உள்ள படங்களும் கமர்ஷியல் படங்களும் சம அளவில் உருவாகி ஆரோக்யமான ஒரு சூழலைக் கொண்டுள்ளன.

அந்த வகையில் இந்த ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற  திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்துள்ள 2018. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஜுட் ஆண்டனியின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளது லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிப்புக்கு பெரிய பிரேக் விடும் நடிகை சமந்தா… என்ன காரணம்?