கன்னடத்தில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த மோகன் மெல்லிய காதல் படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். 80 களில் அவர் நடித்த பல படங்கள் 175 நாட்களைக் கடந்து ஓடி சாதனைப் படைத்ததால் சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். ஆனால் 90 களுக்கு பிறகு அவர் பார்முலா படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது. அதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.
பாலுமகேந்திரா இயக்கிய கோகிலா திரைப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் நடித்தார் மோகன். அப்போது சில நாட்கள் ஷூட்டிங் முடிந்த நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் எப்போது என தெரியாததால் மோகன் ஷூட்டிங் செல்லாமல் இருந்துள்ளார்.
ஆனால் அங்கு இவரோடு இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகளுக்காக கமல்ஹாசன் காத்திருந்தாராம். பிறகு எப்படியோ தந்தி கொடுத்து இவரை வரவழைத்துள்ளனர். அப்போது அவரை அழைத்த கமல்ஹாசன் நல்லா நடிக்குற? அப்புறம் ஏன் ஒழுங்கா ஷூட்டிங் வராம பிரச்சன பண்ற?” எனக் கேட்டுள்ளார்.
அதற்கு மோகன் “சார், எனக்கு ஷூட்டிங் எப்பன்னே தெரியாது சார்” எனக் கூறியுள்ளார். அதைக் கேட்ட கமல் “இப்படியெல்லாம் இருக்காதே. ஒரு டைரி வாங்கி வைத்துக் கொண்டு அதில் என்றைக்கெல்லாம் ஷூட்டிங் இருக்கு, இல்லை என்று எழுதி வைத்துக் கொள்” என அட்வைஸ் செய்துள்ளார். இதை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.