Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்-நாகார்ஜூனா சந்திப்பு: சந்தோஷத்தில் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்-நாகார்ஜூனா சந்திப்பு: சந்தோஷத்தில் போட்டியாளர்கள்!
, சனி, 7 நவம்பர் 2020 (20:43 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்-நாகார்ஜூனா சந்திப்பு
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வருகிறார் என்பதும், பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார் என்பது தெரிந்ததே. தமிழ் நிகழ்ச்சியை விட ஒரு மாதத்திற்கு முன்பே தெலுங்கு நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களும் நாகார்ஜுனாவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் காட்சிகளின் முன்னோட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
 
டிஜிட்டல் திரையில் மூலம் கமல்ஹாசன் மற்றும் நாகார்ஜுனா ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதும் அதே போல் தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிப்பது போலவும் அவர்களுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவிக்கும் காட்சிகள் உள்ளன. 
 
தொழில்நுட்ப வசதி காரணமாக தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் அவற்றின் போட்டியாளர்களையும் ரசிகர்கள் ஒரே திரையில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''செம்பருத்தி'' சீரியலில் இருந்து நீக்கம்… பிரபல நடிகை கண்ணீிர்…ரசிகர்கள் அதிர்ச்சி