கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தின் கதையில் பல திருத்தங்களை சொல்லி வருகிறாராம் கமல்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கமல் ரசிகர். அவரின் கைதி படத்தை விருமாண்டியின் தொடர்ச்சி என்றும் மாஸ்டர் படத்தில் நம்மவர் படத்தை நினைவுபடுத்தும் காட்சிகளும் உள்ளன. இந்நிலையில் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார். இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
ஆனால் தேர்தல் முடிந்த பின்னரும் படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை. அதற்குக் காரணம் கமல் திருத்தத்துக்கு மேல் திருத்தமாக சொல்லி வருகிறாராம். இதனால் லோகேஷ் இப்போது சொந்த ஊருக்கு சென்று திரைக்கதையை மாற்றி அமைத்து வருகிறாராம்.