கமலின் அடுத்த படத்தில் வடிவேலு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கமல் கடந்த 2008 ஆம் ஆண்டு “தலைவன் இருக்கிறான்” என்ற தலைப்பில் ஒரு அரசியல் படத்தை இயக்கி நடிக்க விரும்பினார். அப்போது அதற்கான சூழ்நிலைகள் அமையாததால் படம் ஆரம்பிக்கப்படாமலேயே கைவிடப்பட்டது. அதன் பின் கடந்த ஆண்டு திடீரென மீண்டும் அந்த படத்தை ஆரம்பிக்கப் போவதாக கமல் அறிவித்தார். இதற்காக ரஹ்மானை சந்தித்து அந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்தார்.
இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்ததும் அவர் உடனடியாக தலைவன் இருக்கிறான் படத்தை ஆரம்பிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி உண்மையாக இருக்கும் பட்சத்தில் சிங்காரவேலன், தேவர் மகன், காதலா காதலா ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் இணையும் நான்காவது படமாக அது இருக்கும் என தெரிகிறது.