ஒரு சிறிய அமைப்பு அல்லது சிறிய அரசியல் கட்சிகள் பிரபலம் ஆகவேண்டும் என்றால் அதற்கு ஒரே செலவில்லாத வழி யாராவது ஒரு பெரிய ஆளை எதிர்த்து போராட வேண்டும். அப்படி செய்தால் அந்த அமைப்பு அல்லது அரசியல் கட்சி எளிதாக மக்கள் மத்தியில் போய் சேர்ந்துவிடும்
இந்த கொள்கையை மனதில் வைத்துதான் தற்போது கமல் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ என்பதை யாரும் ஒப்புக்கொள்ள முடியாது. 'சரவணன் மீனாட்சி' போன்று அதுவும் ஒரு சீரியல்தான். கண்ணுக்கு தெரியாத இயக்குனர் ஒருவர் சொல்கிறபடி கமல் உள்பட அனைவரும் நடிக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை விரும்பினால் பார்க்கலாம், விருப்பம் இல்லையென்றால் வேறு நிகழ்ச்சியை பார்க்கலாம்.
ஒருவேளை உங்களுக்கு கலாச்சார சீரழிவை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்துகிறது என்று நீங்கள் நினைத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அதைவிட்டு கமல் வீட்டின் முன் போராட்டம் நடத்துவது, அவர் படம் வெளியாகும் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம் என்று கூறுவது வெற்று விளம்பரமே என்பது சிறுபிள்ளைக்கு கூட தெரியும் என்பது தான் அனைவரின் கருத்தாக உள்ளது.