Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூனு பேரும் வேற மாதிரி… மிரட்டலான விக்ரம் படத்தின் அடுத்த glimpse

மூனு பேரும் வேற மாதிரி… மிரட்டலான விக்ரம் படத்தின் அடுத்த glimpse
, வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (13:43 IST)
விக்ரம் படம் சம்மந்தமாக புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது.

விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூவரின் கதாபாத்திரங்களைப் பற்றிய அறிமுகமாக ஒரு புதிய வீடியோவை இணையத்தில் வெளியிட, அது இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிராமத்தில் வீடு கட்டி குடியேறிய சிவகார்த்திகேயன்… வைரல் புகைப்படங்கள்!