Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேட்டையாடு விளையாடு படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வேட்டையாடு விளையாடு படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, சனி, 10 ஜூன் 2023 (13:05 IST)
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் செவந்த் சேனல் மாணிக்கம் நாராயணனுக்கு இந்த படம் எந்த லாபத்தையும் பெற்றுத்தரவில்லை என அவரே பலமுறைக் கூறியுள்ளார்.

ஆனால் இன்று வரையிலும் கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக வேட்டையாடு விளையாடு இருந்து வருகிறது. இந்நிலையில் வெளியாகி 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தினை ரிரிலீஸ் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரி மாஸ்டரிங் செய்யப்பட்டுள்ள வேட்டையாடு விளையாடு படம் ஜுன் 23 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆவலுடன் காத்திருந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் - என்ன தான் இருந்தாலும் இதை ஏத்துக்கவே முடியாது!