Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் படத்துக்கும் எமர்ஜென்சி விதிக்கப்பட்டுள்ளது… கங்கனா அதிருப்தி!

என் படத்துக்கும் எமர்ஜென்சி விதிக்கப்பட்டுள்ளது… கங்கனா அதிருப்தி!

vinoth

, புதன், 4 செப்டம்பர் 2024 (12:01 IST)
சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்  இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இந்த படம் செப்டம்பர் 6 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், சமீபத்தில் இதன் டிரைலர் ரிலீஸாகி சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.

இந்த படத்துக்கு சில சீக்கிய அமைப்புகள் எதிர்த்து தெரிவித்துள்ளனர். படத்தில் சீக்கியர்களை தவறாகக் காட்டியுள்ளதாக அவர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இந்நிலையில்தான் இப்போது எமர்ஜென்ஸி படம் ரிலீஸாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்தில் பல காட்சிகளை நீக்க சொல்லி வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு கங்கனா சம்மதிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள கங்கனா “என் படத்துக்கும் தற்போது எமர்ஜென்ஸி விதிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது” எனக் கூறியுள்ளார். இதனால் படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சல்மான் கான் & முருகதாஸ் படத்துக்காக 15 கோடியில் தாராவி செட்!