கொம்பன் உள்பட பல திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் மீண்டும் நடிகர் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ஏற்கனவே கார்த்தி சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை முடித்துவிட்டு கொம்பன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது
இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றும் இந்த படத்தை முடித்துவிட்டு அதன்பின்னர் அவர் சர்தார் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டு வருகிறது