கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய அறிவிப்பு
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் அவர் இயக்கும் அடுத்த படத்தில் சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் நடிக்கவிருக்கும் 60வது திரைப்படமான இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமார் இயக்கும் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விக்ரம், துருவ் விக்ரம், கார்த்திக் சுப்புராஜ், அனிருத் ஆகியோர் ஒரே படத்தில் இணையவிருப்பதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் ‘கோப்ரா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.