இந்தி இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளான காஷ்மீர் ஃபைல் படத்திற்கு தாதாசாகேப் பால்கே விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய திரைத்துறையில் ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இந்திய சினிமா துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை வென்றவர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் சிறந்த திரைப்படத்திற்கு விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் விருதை வென்றுள்ளது. கடந்த ஆண்டு வெளியான இந்த படம் காஷ்மீரில் இந்து பண்டிட்கள் கொல்லப்பட்டதை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.
படம் வெளியான சமயத்திலேயே பல்வேறு விமர்சனங்களையும், சர்ச்சையையும் சந்தித்த நிலையில், சமீபத்தில் நடந்த கோவா திரைப்பட விழாவில் இஸ்ரேலிய இயக்குனர் ஒருவர் இந்த படத்தை மோசமான படம் என விமர்சித்ததும் பிரச்சினையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த படத்திற்கு பாபாசாகேப் பால்கே விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.