நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் சரக்கு வாங்கும் பெண்களின் வீடியோவை பதிவு செய்து மகளிர் உரிமை தொகையை சிந்தாமல் சிதறாமல் திரும்பிவிடும் என்று பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வரும் செப்டம்பர் முதல் வழங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு இளம் பெண்கள் டாஸ்மாக் மது கடையில் மது வாங்கும் வீடியோவை பதிவு செய்து உள்ளார்.
இந்த வீடியோ குறித்து கஸ்தூரி கூறியதாவது: தண்ணியடி, பெண்ணே தண்ணியடி ! எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண், இளைப்பில்லை காணென்று தண்ணியடி. அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும். அவரது இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்படும் நிலையில் அவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளதாவது:
தவறான பாதையில் போகும் சில பெண்களை பற்றியே பதிவு. அவர்களின் பணம் பற்றியே கூறியுள்ளேன். மதுக்கடையில் பெண்கள் நிற்கும் நிலையை கண்டிக்க மாட்டீர்கள். அது யாருக்கென்றாலும். பெண்கள் உரிமை பணம் ஆண்களின் தவறான செலவுகளுக்கு பலியாகக்கூடாது .