கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் இதுவரை 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. படம் மிகப்பெரிய அளவில் வசூலித்தாலும், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையே பெற்றது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் தட்டையாக உருவாக்கப்பட்டு இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இரண்டாம் பாதியில் இடம்பெற்ற பிளாஷ்பேக் காட்சி ரசிகர்களை இருக்கையில் நெளிய வைத்தது. ரசிகர்கள் அதுபற்றி விமர்சனம் செய்த போது அது பேக் பிளாஷ்பேக் என லோகேஷ் சொல்லப் போக, அதற்கும் கடுமையான எதிர் விமரசனங்கள் வந்தன.
இந்நிலையில் மலையாள திரைப்பட தயாரிப்பாளரும், நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ் குமார் லியோ படம் பற்றி எதிர்மறையான விமர்சனத்தை வைத்துள்ளார். அதில் “லியோ படம் எனக்குப் பிடிக்கவில்லை. அதன் க்ளைமேக்ஸில் எப்படி ஹீரோ 200 பேரை அடிக்கிறார் என்பது புரியவில்லை. இதெல்லாம் சூப்பர் ஹீரோ படம் போல உள்ளது. இதை சாமான்ய ரசிகர்களால் கனெக்ட் செய்துகொள்ள முடியவில்லை.” எனக் கூறியிருந்தார்.
இது விஜய் ரசிகர்களைக் கோபப்படுத்த, அவரை இப்போது கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “சாணிக்காயிதம் படத்தில் உங்கள் மகள் அத்தனை பேரை அடித்துக்கொள்ளவில்லையா” எனக் கேட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.