கே.ஜி.எஃப். 2 வெளியாகி இரண்டாவது வாரம் தொடங்கியுள்ள நிலையில் தற்போதும் கூட்டம் குறையாமல் வசூலில் வெற்றி நடைப் போட்டு வருகிறது.
கன்னடத்தில் எடுக்கப்பட்ட கேஜிஎஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கேஜிஎஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் படம் வெளியாகி இரண்டாவது வாரம் தொடங்கியுள்ள நிலையில் தற்போதும் கூட்டம் குறையாமல் வசூலில் வெற்றி நடைப் போட்டு வருகிறது. கே.ஜி.எஃப். 2 படம் வெளியான 5 நாட்களில், ஒட்டுமொத்தமாக 617.45 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இதில் இந்தியில் மட்டும் இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. படத்திற்கான வரவேற்பு அதிகரித்து காணப்படுவதால், 2 வாரங்களில் வசூலில் சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.