இயக்குனர் கிருத்திகா உதயநிதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து உதயநிதி ஸ்டாலின் மீதான போக்கஸ் அதிகமாகியுள்ளது. அவரும் சினிமாவை முழுமையாக விட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் திருநங்கைகளுக்கான நலத்திட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரின் மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது செய்தியாளர்கள் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு என்பது போல அரசியலில் திருநங்கைகளுக்கும் திமுக இட ஒதுக்கீடு கொண்டுவருமா என்று கேட்டனர். அந்த கேள்விக்கு நான் அவ்ளோவா அரசியல் பேசமாட்டேன் எனக் கூறி சிரித்து மழுப்பி விட்டார்.