நடிகை லட்சுமி மேனன் கும்கி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் சசிகுமார் மற்றும் விஷாலுடன் தொடர்ந்து படங்களில் நடித்தார்.
அதோடு திரைப்படங்களில் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் கதை தேர்வில் கோட்டைவிட்டதால் சில சருக்கல்களையும் சந்தித்தார்.
படங்களில் நடிக்கப்போவது இல்லை என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாயின. வாய்ப்பின்றி முடங்கிக் கிடந்த லட்சுமி மேனன் தற்போது பிரபுதேவா ஜோடியாக 'யங் மங் சங்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படம் வெளியானதும், மீண்டும் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்து விடுவேன் என சபதம் எடுத்துள்ளார் லட்சுமி மேனன்.