Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிமேஷன் பொம்ம மாதிரி இருக்கு..! – லெஜெண்ட் சரவணா ஃபர்ஸ்ட் லுக்!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (10:35 IST)
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தனது நிறுவன விளம்பர படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகள் முன்னதாக தனது நடிப்பு மற்றும் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை உருவாக்க தொடங்கினார். இதை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களை இயக்கிய ஜெரி அண்ட் ஜெரால்டு இயக்கும் நிலையில், நடிகர் பிரபு, விவேக், மாடல் கீத்திகா திவாரி ஆகியோர் நடித்துள்ளனர்.

இடையே கொரோனா காரணமாக ஷூட்டிங் ரத்து, நடிகர் விவேக்கின் மறைவு ஆகியவற்றால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் பெயரே “தி லெஜெண்ட்” என்று வைக்கப்பட்டுள்ள நிலையில் போஸ்டரில் சரவணா அனிமேஷன் பொம்மை போல தெரிவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments