நடிகர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும் இயக்குனருமான லியாகத் அலிகான் தனக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது பற்றிக் கூறியுள்ளார்.
90 களில் விஜயகாந்தின் பல படங்களுக்கு வசனம் எழுதியவர் லியாகத் அலிகான். விஜயகாந்துக்கும் லியாகத்துக்கும் உள்ள உறவு என்பது வெறும் நடிகர் – வசனகர்த்தா என்பதை தாண்டி இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் இருமுறை லியாகத் அலிகானுக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் விஜயகாந்தோ என் நண்பன் என் படத்தின் மூலமாகதான் இயக்குனராக வேண்டும் என சொன்னதால் அந்த பட வாய்ப்புகளை இழந்தார்.
விஜயகாந்த் சொன்னது போல அவருக்கு எங்க மொதலாளி படத்தை இயக்கும் வாய்ப்பும் வந்தது. ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்ததால் அதன் பின் லியாகத் அலிகானுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒருவேளை அவர் அந்த ரஜினி பட வாய்ப்புகளை ஏற்றிருந்தால் இன்னேரம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்திருப்பார்.