பாடலசிரியர் விவேகா, மாணவி அனிதா மரணத்தை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நீட் தேர்வினால் தனது மருத்து கனவு நிறைவேறாததால் மனமுடைந்து அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துக்கொண்டார்.
இவரின் இழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஆங்காங்கே போராட்டங்களும் வெடித்து வருகிறது.
சினிமாதுறையை சேர்ந்த பலரும் அரசை எதிர்த்து கண்டனங்களையும், அனிதாவிற்கு தங்களது இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல பாடலாசிரியர் விவேகா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மருத்துவ முத்தம் இருக்கட்டும், இந்த மருத்துவ யுத்தத்தையும் கவனிப்போம் என பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவு அனைவருக்கும் சாட்டையடியாக இருக்கிறது. அரசியல் தலைவர்களை மட்டுமே குற்றம் சொல்லும் நாம் இதற்காக என்ன செய்தோம் என்பது கேள்விகுறியாகவுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த ஓவியாவை தக்க நேரத்தில் ஆதரித்த நாம் அன்று உச்சநீதிமன்றத்தில் அனிதா வழக்கு தொடர்ந்த போது அவரை ஆதரிக்க மறந்துவிட்டோம்.