Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாமன்னன் டிரைலர் ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட தகவல்!

மாமன்னன் டிரைலர் ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட தகவல்!
, வியாழன், 15 ஜூன் 2023 (14:36 IST)
அமைச்சர் ஆகிவிட்ட உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக உருவாகி வருகிறது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது.

இந்த படம் பக்ரீத் பண்டிகையன்று ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆக வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில்  படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. படத்தின் கதைக்களம் மேற்கு மாவட்ட அரசியலை மையமாக வைத்து உருவாவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல கவனம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''சினிமாவில் பாரபட்சம் ...தென்னிந்திய ரசிகர்கள் இதைப் பார்ப்பதில்லை''- நடிகை அவிகா கவுர்