நேற்றைய டாஸ்க்கில் அமரேந்திர பாகுபலியாக டேனியும், ராஜமாதாவாக மும்தாஜூம், நயன்தாராவாக யாஷிகாவும், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரிஷாவாக ஐஸ்வர்யாவும், எந்திரனாக பாலாஜியும் மேக்கப் போட்டு இருந்தனர். இதில் மகத் ஒரு அணியாகவும் டேனி ஒரு அணியாகவும் இருந்தனர். இதில் ஐஸ்வர்யாவும் மும்தாஜும் ஒரே அணியில் செயல்பட்டது ஆச்சரியமாக இருந்தது.
இந்த இரு அணிகளுக்கும் நேற்று கொடுக்கப்பட்ட வேலை என்னவென்றால் ஹெலனா என்ற மருத்துவர் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பார் அவரை 5 மேக்னடிக் சாவிகளை கொண்டு திறந்து மீட்க வேண்டும். மகத்தின் அராஜகமான செயலையும் மீறி டேனி அணி 3 சாவிகளை கைப்பற்றி இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 'தொந்தரவு செய்யலாம்’ என்கிற விதியை தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு, மும்தாஜை வரம்புக்கு மீறி மகத் கிண்டலடித்துக் கொண்டேயிருந்தார். “ஆளும் மண்டையும்”, “மூஞ்சியைப் பாரு”, “யானைக்குட்டி”, “ஒண்ணு ஆம்பளை மாதிரி நடக்குது, இன்னொன்னு பொம்பளை மாதிரி நடக்குது” என மோசமாக பேசிக்கொண்டே இருந்தார். ஆனால் மிக அமைதியாக மும்தாஜ் இதனை எதிர்கொண்ட விதம் ஆச்சரியத்தை அளித்தது.