மாஸ்டர் படத்தின் தமிழக திரையரங்க வசூல் பாகுபலி 2 ஐ நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
மாஸ்டர் திரைப்படம் 50 சதவீத இருக்கைகளோடு வெளியான நிலையில் பெரும்பாலான திரையரங்குகள் அந்த விதியைக் கடைபிடிக்காமலும் அதிக விலைக்கு டிக்கெட்களை விற்றும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் சில நாட்கள் கூட்டத்துக்கு படத்துக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றும் ஓடாத படத்தை ஓடியதாக பொய்க் கணக்கு காட்டுவதாகவும் சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர். ஆனாலும் எப்படி பார்த்தாலும் திரையரங்குகளுக்கு மாஸ்டர் திரைப்படம் உயிர்க்கொடுத்துள்ளது உண்மைதான் என திரைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் பெருந்தொற்றுக்குப் பிறகு படம் என்பதால் மக்கள் 8 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குக்கு சென்று இந்த படத்தைப் பார்த்து கொண்டாடித் தீர்த்தனர். கிட்டத்தட்ட 25 நாட்களைக் கடந்துள்ள மாஸ்டர் திரைப்படம் தற்போது பெருவாரியான திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு விட்டது. இதையடுத்து மாஸ்டர் படத்தின் வசூல் குறித்து ஆச்சர்யமளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை பாகுபலி 2 படம்தான் அதிக வசூல் செய்த திரைப்படம். இப்போது மாஸ்டர் திரைப்படம் அந்த வசூலை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.