மாஸ்டர் படக்குழு மீண்டும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி நேற்று முன் தினம் முதல் உலகமெங்கும் ரிலீஸாகியுள்ளாது. சமூகவலைதளமெங்கும் மாஸ்டர் கொண்டாட்டமாக இருக்கிறது. அதில் முதல் பாதி செம்மயாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக செல்வதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இரண்டு நாட்கள் ஆன நிலையில் இப்போது எதிர்மறை விமர்சனங்களும் வர ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் பல மாதங்கள் கிடப்பில் இருந்ததாலும், கொரோனா காரணமாக 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாலும் மாஸ்டர் படத்தால் அதன் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு உதவும் வகையில் அந்த தயாரிப்பாளருக்கு மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடித்துத் தர விஜய் முடிவு செய்துள்ளாராம். நெல்சன் இயக்கும் விஜய்யின் படம் முடிவடைந்த பின்னர் இந்த படம் தொடங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.