நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ’ஆதித்ய வர்மா’ என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக காதலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
வசந்த மாளிகை, வாழ்வே மாயம் படங்களை அடுத்து ஒரு மனதில் நிற்கும் வகையிலான ஒரு காதல் கதை என்றும் இளைஞர்கள் பாராட்டி வருகின்றனர். ஒருபக்கம் துருவ் விக்ரமுக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும் இன்னொரு பக்கம் அவருக்கு கண்டனங்களும் குவிந்து வருகிறது
ஏற்கனவே இந்த படத்தில் அதிகப்படியான புகைபிடிக்கும் காட்சி இருப்பதால் சுகாதாரத் துறை துருவ் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஆதித்ய வர்மா படக்குழுவினர்களுக்கு மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனத்தைத் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது
ஆதித்ய வர்மா திரைப்படத்தில் மது அருந்திவிட்டு சர்ஜரி செய்வது போன்ற ஒரு காட்சிக்கு ஒரு டாக்டர் சர்வீஸ் சார்ஜும் செய்வதாக ஒரு காட்சி இருக்கும் இந்த காட்சிக்கு கண்டனம் தெரிவித்த மருத்துவர்கள் இந்த காட்சியைப் பார்க்கும் மருத்துவர்கள் மீது பொதுமக்களுக்கு தவறான எண்ணம் தோன்றும் என்றும் எனவே இதுபோன்ற காட்சியை படக்குழுவினர் கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் தங்களது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
ஒரே ஒரு படம் நடித்துள்ள துருவுக்கு பல பக்கங்களிலிருந்து வாழ்த்துக்களும் சிலரிடம் இருந்து கண்டனங்கள் குவிந்து வருவதால் ஒருபுறம் மகிழ்ச்சியும் ஒரு பெரும் அதிர்ச்சியியும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது