தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
சிஏஏ, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, வேளாண் சிறப்புச் சட்டங்கள் உள்ளிட்டவைகள் நாட்டில் பெரும் பேசுபொருளாகவும் விவாதத்திற்குள்ளாகவும் அமைந்தது.
இந்நிலையில், மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சர்வர்தன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், மத்திய அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாஹேப், ரமேஷ் உள்ளிட்ட 7 பேர் தங்களில் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்களுக்கு வேறு துறைகள் வழங்கப்படுமா அல்லது இவர்களுக்கு மாற்றாக புதியவர்கள் இப்பதவியில் பொறுப்பேற்பார்களா எனக் கேள்வி எழுந்துள்ளது. இன்று காலையில் பிரதமர் மோடி புதிய அமைச்சரவையில் இடம்பெறுவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவராக உள்ள எல்.முருகன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தற்போதைய தமிழக பாஜக தலைவராஜ உள்ள எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கிடைத்தால், தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.