சில வருடங்களுக்கு முன் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்து உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தியபடம் அவதார். இந்தப் படத்தின்போது, ஒரு அழகிய கார் ஒன்றை இயக்குனர் காட்சிப் படுத்தியிருப்பார்.
அதே போன்ற ஒரு காரை ஜெர்மனியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கிவரும் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான பென்ஸ் நிறுவனம், தற்போது ஒரு காரை வடிவமைத்துள்ளது
இந்தக் கார் முழுவதுமான தானியங்கி முறையில் இயங்கும். இந்தக் காரில் ஸ்டீரிங் இல்லை; ஆனால் அதற்குப் பதில் இதயத்துடிப்பு, சுவாசத்தை அறியும் வசதியும், நுண்ணறும் திறனும் உள்ளது. மேலும் கார் தன்னிச்சையாக இயங்கும் அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
இன்று, டைட்டானிக் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இக்காரை அறிமுகம் செய்தார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.