இயக்குனர் மோகன் ராஜா லூசிபர் படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த வருடம் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் தூண்டியுள்ளது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.
முதலில் இந்த படத்தை இயக்க இருந்த இயக்குனர் சுஜித் நீக்கப்பட்டு ரீமேக் படங்களை இயக்குவதில் புகழ்பெற்ற மோகன்ராஜா நியமிக்கப்பட்டார். அவரும் படத்தின் பணிகளைத் தொடங்கி பூஜையும் போடப்பட்டது. ஆனால் அவர் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதை மாற்றி அமைக்க சொல்லி சிரஞ்சீவி கேட்க, மோகன் ராஜா செய்த மாற்றங்கள் எதுவும் சுத்தமாக சிரஞ்சீவிக்கு பிடிக்கவில்லையாம். இதனால் இப்போது படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து மோகன் ராஜாவும் விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிரஞ்சீவியின் கடந்த சில படங்கள் ப்ளாப் ஆகி வருவதால் எப்படியும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம்.