பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசனில் திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்ட நமீதா தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டதாக கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு திருநங்கையாக நமீதா தனது கதையை உருக்கமாக கண்ணீருடன் கூறியபோது அவருக்கு ஆதரவு குவிந்தது.
பிக்பாஸ் வீட்டில் அவர் 100 நாட்கள் வரை இருப்பார் என திருநங்கை சமூகமும் அவரது பேராதரவு அளித்தது. இதனிடையே திடீரென தாமரை செல்வியுடன் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் தூக்கி எரிந்ததால் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது.
நான் 40 குழந்தைகளை வளர்ப்பேன் என கூறியதை கிண்டலாக நீ 40 இல்ல 400 குழந்தைகள் கூட வளர்க்கலாம் என தாமரை கூறியதால் கோபப்பட்டு கொந்தளித்தார். மேலும், பவானி தாமரைக்கு வெள்ளை மீசை வரைந்ததை குறித்து கேட்டதற்கு, நான் ஆணாக மாறி பவானியை காதலித்து திருமணம் செய்துக்கொள்ளப்போகிறேன் என நமீதாவை குத்தி காட்டி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் சண்டை முற்றி நமீதா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என செய்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில் திருநங்கை சமூகத்தை சேர்ந்த சகோதரி ஒருவர், நமீதா ஒரு திருநங்கையாக தன் வாழ்வின் அனுபவித்த கஷ்டங்களை பகிர்ந்து கொண்டதை எண்ணி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார். அவர் தாமரையுடன் சண்டையிட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் கோபட்டாலும் பின்னர் மனமிறங்கி மன்னித்து அவர்களுடன் சகஜம் போல் பழகிடுவார். அவர் மனஉளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் தான் இருக்கிறார். நான் போன் செய்து பேசினேன் என எமோஷனலாக பேட்டி கொடுத்துள்ளார்.