அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இதனை அடுத்து மீண்டும் அவர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது
மேலும் இந்த படத்தையும் போனிகபூர் அவர்களை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படமும் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படத்தின் நாயகிக்கு ஆக்சன் காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் தெரிகிறது
இதனை அடுத்து இந்த படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் சமீபத்தில் நயன்தாரா நடித்து இருந்தார் என்பதும் அந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே
இதனை அடுத்து மீண்டும் அஜீத்துடன் நயன்தாரா நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அஜித் மற்றும் நயன்தாரா தரப்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது