Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனடாவிலும் பிஸ்னஸை தொடங்கிய நயன்தாரா!

கனடாவிலும் பிஸ்னஸை தொடங்கிய நயன்தாரா!

vinoth

, செவ்வாய், 12 மார்ச் 2024 (10:06 IST)
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன அன்னபூரணி படுதோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் இப்போது புதிதாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.  இந்த படத்தை சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபகாலமாக  நயன்தாரா அதிகளவில் வியாபாரங்களில் முதலீடு செய்து வருகிறார். முன்னணி தேநீர் கடை ஒன்றில் பங்குதாரராக இருக்கும் நயன்தாரா, அழகு சாதன பொருட்கள் மற்றும் சானிட்டரி நாப்கின் ஆகியவற்றை விற்பனை செய்யும் தொழில்களையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய 9 ஸ்கின் பிராண்ட் அழகு சாதனப் பொருட்கள் இப்போது கனடாவிலும் கிடைக்கும் படி புதிய கடை ஒன்றை நயன்தாரா திறந்துள்ளார். இது சம்மந்தமான அறிவிப்பை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திக் சுப்பராஜுக்கு நோ சொன்ன விஜய் தரப்பு!